Posts

Showing posts from June, 2010

ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’

‘ஆயிரம் முலைகளோடு வந்த  ஆதித் தாய்’ தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையிலிருக்கும் மறைந்த முதலமைச்சர் திரு. காமராஜர் ஆரம்பித்துவைத்த சத்துணவுத் திட்டத்துக்கு நிகரான உணவுத் திட்டமொன்று, ஐம்பதுக்களில் வட இலங்கைக் கல்வி வட்டாரப் பள்ளிகளில் நடைமுறையிலிருந்தமை எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது. சின்ன இடைவேளை எனப்பட்ட 10.15 மணி இடைவேளையில் காலை ஆகாரமாக பாலும், மதிய உணவு இடைவேளையான 12.45க்கு பணிஸ_ம் கொடுத்தார்கள். பிரித்;தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த உணவளிக்கும் முறைமைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கந்தர் மடப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்வரை சின்ன இடைவேளையில் பால் கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னால் அது நின்றுபோக மதிய வேளையில் பணிஸ் கொடுப்பது தொடர்ந்துகொண்டிருந்தது. பின்னால் அதுவும் நின்றுபோனது. எப்போதென்று தெரியவில்லை. அதேவேளையிலேயே வட இலங்கைக் கல்வி வட்டார அனைத்துப் பள்ளிகளிலும் நின்றுபோயிருத்தல் கூடும். மதிய உணவு இடைவேளை நேரமளவில் கந்தர் மடப் பள்ளிக்கூட வளாகத்தின் நிறைந்த மாமரங்களிலெல்லாம் ஊரிலுள்ள காக்கைகள் முழுவதும் பறந்துவந்து கூடிவிடும்.

கலாபன் கதை: 12

கூட்டிலிருந்து விடுதலையாக்குதல் எனக்குத் திருமணமான பின்னர் தன் சரீர இச்சைகள் புரியப்பட்ட பெண்கள்பற்றி கலாபன் எனக்கு மிதமாகவேதான் எழுதினான் என்று சொல்லவேண்டும். தான் கொண்டிருந்த உணர்வுகள் என்னையும் ஈர்த்துவிடக்கூடாது என்பதில் அவன் கவனம்கொண்டிருந்தான் என்பதை அந்தத் தவிர்த்தலிலிருந்து நான் புரிந்துகொண்டேன். அவனது கடிதங்களால் எழுச்சியடைந்து கப்பலேற சிறிதுகாலம் முயன்றுகொண்டிருந்தவன்தானே நானும்! அதிகமாகவும் அவன் எழுதியவை உடல் மன இச்சைகளுக்கு இயைந்துவிடும்படியான சூழ்நிலைகளை விளக்குவனவாக மட்டுமே இருந்தன. தாய்லாந்திலிருந்து அவன் எழுதிய கடிதம், அவன் எழுதிய கடிதங்களுள் முக்கியமானது. சரீரார்த்தமான ஆசைகளும், மனோவுணர்வு சார்ந்த காதல் கருணை போன்றனவும் வௌ;வேறு திசைகளில் பயணம் செய்யும்பொழுது வாழ்க்கை தளும்பிவிடுகிறது என அதில் அவன் எழுதியிருந்தான். அவற்றின் ஒரே திசைப் பயணமே ஒருவனை ஏகபத்தினி விரதனாகவும், ஒருத்தியை ஏகபுரு~ விரதையாகவும் ஆக்குவதாக அவன் சொல்லியிருந்தான். ‘ஒரு குடும்பஸ்தனுடைய மன உடல் உணர்வுகளினது வௌ;வேறு திசைகளினூடான வழிப்பயணங்கள் என்னைப்போன்ற ஊதாரிகளினைத்தான் உருவாக்குகின்றது. நீண